Mnadu News

என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து

தமிழகத்தில் திருச்சியில் பிறந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் இந்த கோமதி மாரிமுத்து சிறு வயதிலேருந்தே இவர் தடகள விளையாட்டில் ஆர்வமுற்று இருந்தார் . தன்னம்பிக்கையுடன் இவர் பங்கேற்ற பல போட்டியில் பல பதக்கங்களை வென்றார் .

படிப்படியாக முன்னினரி நாட்டுக்காக பல பதக்கங்களையும் வென்றுள்ளார் . இந்நிலையில் ஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் பல தடகள வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர் .

இதில் திங்கட்கிழமை நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் இந்த 800 மீட்டர் பந்தயத்தில் இவர் இந்தியாயவிருக்கான முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் அவர் குடும்பத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் .தங்க பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது .

சமீபத்தில் இவர் தோஹாவில் இருந்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் அதில் அவர் ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கம் என்னால் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழிச்சி என்றும் . நான் வெற்றிபெற்றதை பார்க்க என் அப்பா என்னுடன் இல்லை அவர் இருந்திருந்தா ரொம்பவே சந்தோசபட்டிருப்பார் என்று கூறினார் .

இந்த ஆசிய போட்டிக்கு பிறகு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார் .

Share this post with your friends