இயக்குனர் எழில் இயக்கத்தில், நடிகர் ஜி.வி பிரகாஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பிடாத இந்த படத்தில் நாயகியாக நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நிகிஷா பட்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நிகிஷா பட்டேல் பதிவு செய்த ட்வீட்டில் “கடந்த சில நாட்களுக்கு முன் நான் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன்.
மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.