உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவோ மாவட்ட சிறைக்குள் கைதிகள் விருந்து உண்ணுவது போன்றும், துப்பாக்கியை கையில் வைத்து போஸ் கொடுப்பது போன்றும் வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் அது களிமண்ணால் செய்யப்பட்ட துப்பாக்கி என்றும், அதைப் பிடித்திருப்பவனின் அறையில் உள்ள மற்றொரு கைதி சிறந்த ஓவியர் என்பதால் அச்சு அசலாக வண்ணம் தீட்டியதாகவும் விளக்கமளித்துள்ளது.