Mnadu News

ஹேஷ்டேக் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது…

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். வருட தொடக்கத்திலே அஜித் அவர்களது விஸ்வாசம் படம் மிகப்பிரம்மாண்டமாக சாதனை செய்தது.இப்போது அவர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வசூல் வேட்டையில் உள்ளது. விஸ்வாசம் படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என படம் பார்த்தவர்கள் அனைவரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்,இந்த வருட பாதியில் அதிகம் ட்விட்டரில் டிரண்டான டாக்கில் விஸ்வாசம் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் டாக்குகள்,அந்த வரிசையில் முதலிடத்தை அஜித்தின் விஸ்வாசம் படம் பெற்றுள்ளது. இரண்டாவதாக மக்களவை தேர்தல் 2019, மூன்றாவதாக உலகக்கோப்பை , நான்காவதாக மஹரிஷி, ஐந்தாவதாக நியூ புரபைல் பிக் என்ற ஹாஷ்டாக்குகள் இடம்பெற்றுள்ளன.

ட்ரெண்டிங் ஆன தருணங்களும் உண்டு. அதன்படி, தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான பகிர்வுகளை முந்தி விஸ்வாசம் முதல் இடத்தில் பிடித்திருக்கிறது என்றால் ட்வீட்களின் எண்ணிக்கை கோடியில் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை எனலாம்.நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு பிறகு, இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.

Share this post with your friends