Mnadu News

ட்விட்டரில் மோடியை பின்னுக்கு தள்ளிய  ஹேஷ்டேக் நேசமணி

நேசமணி ஹேஷ்டேக், மோடி பதவியேற்பு விழாவை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில், தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. மோடி 2 வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார் … இதனால், டுவிட்டரில், மோடியின் பதவியேற்பு விழா தான் இந்திய அளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், வடிவேலு கதாபாத்திரத்தை குறிப்பிடும், நேசமணிஎன்ற ஹேஷ்டேக் திடீரென உலக அளவில் முதல் இடத்தில் டிரெண்டாக தொடங்கியது. தற்போது வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் 2 வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. மோடியின் பதவியேற்பு விழாவை குறிப்பிடும் மோடி சர்கார் 2 என்ற ஹேஷ்டேக், 3 வது இடத்திலே டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக கோப்பை போட்டிக்கான ஹேஷ்டேக் டிரெண்டாகிறது.

Share this post with your friends