வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து அபாயகரமான கட்டத்தைத் தாண்டி வழிகிறது. இதனால் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சுமார் 8 லட்சம் பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை காவல்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசம்,மீசோரம், உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் ஒரு வாரம் கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More