மகாராஷ்டிராவின் விதர்பா மண்டலம் மற்றும் கிழக்கு மகாராஷ்டிரா, மேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய இந்தியா பகுதிகளில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் அனல் காற்று வீசும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று மாலை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர் .
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஃபோனி புயல் ஒடிசா கடற்கரைப் பகுதியை இன்னும் சில தினங்கள் தாக்கலாம் என்று எச்சரிக்கப்ட்டு இருப்பதால், மத்திய இந்தியாவில் அனல் காற்றின் தாக்கம் குறையும் என்றும், அதே சமயத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.