இயக்குனர் அனுசரண் முருகையா இயக்கத்தில் நடிகர்கள் கருணாகரன், யோகிபாபு இருவரும் ‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த படத்தின் அடுத்தகட்டமான பின்னணி வேலைகளில் அனைத்தும் தீவிரம்காட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.