செம்பருத்தி பூ தலை முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷ்னராக பயன்படுகிறது. மூடி செழிப்பாக வளர செம்பருத்தி பூவை நிழலில் உலரவைத்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். இதனை தினமும் தலைக்கு தேய்த்து குளிப்பதால் கண்களுக்கு குளிர்ச்சி தரும் மேலும் முடி நன்கு வளர செய்யும்.
செம்பருத்தி பூ மலச் சிக்கலை சீர் செய்வதுடன் இதில் உள்ள ரசாயன அமிலம் குறைந்த இரத்த அழுத்தம்,வயிற்று பிடிப்பு போன்ற குறைபாடுகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
மேலும் சிறுநீர் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.