சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண்டுக்குள் அரசு செயல்படுத்துமா என, பேரவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை மாநகரில் 6 ஆயிரத்து 532 கிலோமீட்டர் அளவுக்கு உயர் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படவுள்ளதாகவும், 2 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.சென்னை மாநகர் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More