கடந்த 2015-ம் ஆண்டு முதல் இமாச்சல பிரதேச ஆளுநராகவும், அதற்கு முன் ராஜஸ்தான் ஆளுநராகவும் பதவி வகித்து வந்த ஆச்சார்ய தேவ்ராட்-ஐ பஞ்சாபில் பிறந்தவர்.
4 ஆண்டுகளாக இமாச்சல் ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆச்சார்ய தேவ்ராட்-ஐ குஜராத் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஏற்கெனவே குஜராத் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி பதவிக்காலம் நாளையோடு முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேசத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கல்ராஜ் மிஸ்ரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.