Mnadu News

இந்திய சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் – டி.எம்.கிருஷ்ணா புகழாரம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இந்த படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. தியாகராஜன் குமாரராஜாவுக்குத் தலைவணங்குகிறேன்.

இயக்குனர்கள் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், குமாரராஜா என இது தமிழ் சினிமாவின் பொற்காலம் போலத் தெரிகிறது. மேலும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற அற்புதமான படத்தின் இயக்குனர் லெனின் பாரதியையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்

Share this post with your friends