Mnadu News

கரூரில் குதிரை துலக்கி திருவிழா -10 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சாகம்

பட்டசணப் பிராட்டி கிராமத்தில் உள்ள செல்லசாண்டியம்மன் ஸ்ரீ சந்தனக் கருப்பண்ணசாமி கோவிலில் 10 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் 8 கிராமங்களின் மக்கள் பங்கேற்கின்றனர். அதன்படி அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாலையில் கோவிலுக்கு என்று வளர்க்கப்படும் குதிரையை அழைத்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கோவிலின் கிளைக் கோவிலுக்கு ஊர்வமாக கொண்டு சென்றனர்.பல்வேறு பூஜைகள் செய்த பின்னர் குதிரையில் காலில் ஊரார் விழுந்து மன்னிப்பு கேட்கும் சடங்குகள் நடைபெற்றன. கடைசியாக குதிரை துலுக்கி கோவிலுக்குள் ஓடியதால் திருவிழாவுக்கான உத்தரவு கிடைத்துவிட்டதாக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Share this post with your friends