வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்தை தேர்தலில் போட்டியிடவுளார் .வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தனது வீட்டுத் தோட்டத்தில் பணத்தை வைத்தது யார் என்று தமக்கு தெரியும் என்றும் தமது மகன் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றது யார் என்று தெரியும் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த துரோகத்தை செய்தவர்கள் யார் என்று தெரியும் என்று பேசிய அவர் கண்கலங்கினார். என்ன நேர்ந்தாலும் உயிர் உள்ள வரை திமுகவில் தான் இருப்பேன் என்றும் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More