நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளன .இந்நிலையில் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பரப்புரைக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் .இந்நிலையில் ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மக்களுக்கு எந்த மாதிரி அரசு அமைய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் .
மேலும் அதில் குறிப்பிட்டதாவது நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்தால் கட்டாயம் நீட் கிடையாது என தெளிவாக அறிவித்துள்ளனர்.ஆனால் மோடி அரசு நீட் தேர்வு தொடரும் என கூறியுள்ளதால் இதிலிருந்தே தெரிகிறது யாருடைய அறிக்கை தெளிவாக உள்ளது .எனவே தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் என அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 13, 2019