இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு ஜெயராம் எழுதிய “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். இவர் இறுதியாக 2009ம் ஆண்டு வெளிவந்த ‘பழசிராஜா’ படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.