Mnadu News

கென்னடி கிளப் படம் குறித்த முக்கிய தகவல்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends