தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு எமதர்மனின் மகனாக நடித்துள்ள படம் ‘தர்மபிரபு’. நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.