தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் போது பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும் ,பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.