திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இன்று காலை காட்டெருமை சுமைதூக்கும் குதிரை ஒன்றை தாக்கியுள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே பலியானது.
இச்சம்பவம் குறித்து வனவர் ராம்குமார் மற்றும் கால்நடை மருத்துவர் ஹக்கீம் க்கு தகவல் தெருவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த வனவர் ராம்குமார் விசாரணை நடத்தினர். பிறகு கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பின்பு இறந்த குதிரையை அதே இடத்தில் புதைத்தனர்.
தொடர்ந்து காட்டுஎருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விவசாய மக்கள் அதிகம் பாதிக்க படுவதாக தெரிவித்தனர் , எனவே வனவிலங்குகளை வன பகுதிற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்