தக்காளி கூடையிலிருந்து முகூர்த்த கூடை, தேங்காய் பழத்தட்டு, மில்களில் பஞ்சுகள் அள்ளுவதற்கான கூடை, கோழி குஞ்சுகளை அடைத்து வைக்கும் கூடை, என்று பலவிதமான வகையில் தயாரித்து வருகிறார்கள். இதற்கான மூங்கில் கேரளாவில் இருந்து தருவித்து, அவற்றை கூடைகளாக தயாரித்து, ரூபாய் 50 லிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், முகூர்த்த நாட்களில் மட்டுமே, மூங்கில் கூடைகள் அதிக அளவில் விற்பனையாகும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பலமுறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் கூடைகள், மற்றும் பிளாஸ்டர் வகை பாத்திரங்களின் வரவால், இந்த தலைமுறையோடு இத்தொழில் அழிந்து போகும் நிலை உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More