Mnadu News

அதிகரித்து வரும் தண்ணீர் பற்றா குறை …சுகாதாரமற்ற நீரை குடிக்கும் அவல நிலை

இளையான்குடி கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு கிடக்கிறது. 500 அடி வரை ஆழம் போர் போட்டும் துளி கூட தண்ணீரை பார்க்க முடியாத அளவிற்கு நீர்வளம் குறைந்துள்ளது. மற்றொரு புறம், டேங்கர் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் நீரும், புழு, பூச்சிகளோடு, கலங்களாக சுகாதாரமற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேறுவழியின்றி சுகாதாரமற்ற நீரை குடிப்பதாக கூறிய இளையான்குடிவாசிகள், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share this post with your friends