இங்கிலாந்தில் மான்செஸ்டடர் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களமிறங்கின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ’ரிசர்வ் டே’ விதிப்படி மீண்டும் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்தின் ராஸ்டெய்லர் 74 ரன்கள், லதாம் 10 ரன்கள், ஹென்றி ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். தினேஷ் கார்த்திக் 6 ரன்களும், ரிஷாப் பண்ட், பாண்ட்யா தலா 32 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், தோனி, ஜடேஜா ஆகியோர் ஆறுதல் அளித்தனர். இருவரின் ஆட்டமும் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில், ஜடேஜா 77 ரன்களில் வெளியேறினார்.
தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். புவனேஸ்வர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில், சகால் 5 ரன்கள் எடுத்தார். 49.3 ஓவரில் 221 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.இதனையடுத்து 18 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.