Mnadu News

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் போட்டியின்போது காயமடைந்தார்

தடகள போட்டிகளில் பல பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பேரையும் புகழையும் பெற்று தந்தவர் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தற்போது தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர் .இந்த தொடரில் பல போட்டிகளில் இந்திய தடகள வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

மகளிருக்கான 400 மீட்டர் தடகள போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் முதல் ஹீட் பிரிவில் கலந்துகொண்டு ஓடினர் . அப்போது திடிரென்று அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தார் .ஓட்டத்தின் பாதியில் காயப்படைந்ததால் அவரலால் அந்த போட்டியை தொடர முடியவில்லை .

வலியால் அவதிப்பட்டு வரும் ஹிமா தாஸ் மீதம் இருக்கும் போட்டிகளில் கலந்துகொள்ளவரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது .இந்நிலையில் அவரது பயிற்சியாளர் ஹிமா தாஸுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து கவலைப்பட வேண்டாம் என அவரை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார். ஒரிரு நாட்களில் அவர், சரியாகிவிடுவார்” என்று கூறியுள்ளார் .ஹிமா தாஸ் விரைவில் குணமடைந்து இந்தியாவுக்கு பதக்கத்தை வென்றுதருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share this post with your friends