இந்திய கடற்படையில் சக்திவாய்ந்த போர்க்கப்பலில் ஒன்றான ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா கர்நாடக மாநிலத்தின் கார்வார் துறைமுகத்தில் தீ விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் லெப்டினன்ட் டி.எஸ். சவுகான் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .
வீரர்கள் அதிவேகமாக செயல்பட்டதால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . இருப்பினும் அந்த கப்பலில் தீயை அணைக்கும் பணியில் இருந்த டி.எஸ். சவுகான் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டார் .அவர் உயிருக்கு போராடியதை பார்த்த சக வீரர்கள் கடற்படை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் அவர் உயிர்பிரிந்தது .
இந்த விபத்து குறித்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .