ரஷ்யாவிடம் இருந்து இரு போர்க்கப்பல்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியா மீது குறிப்பிட்ட சில தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை டாலருக்குப் பதில் புதிய கட்டண முறையில் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை இந்தியாவும் ரஷ்யாவும் சொந்த நாணயங்கள் வாயிலாகவே மேற்கொள்ளும் புதிய கட்டண முறைக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இதன்படி ரஷ்யா உடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரூபிள் மற்றும் ரூபாயில் தீர்க்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.