சீன அரசு விரைவில் பிரமாண்டமான விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.இந்த விழாவிற்காக பல நாடுகளுக்கு சீன அரசு அழைப்புவிடுத்துள்ளது .விரைவில் சீன கடற்படையின் 70-வது ஆண்டு நிறைவு விழா நடக்கவுள்ளது . சீனாவின் குவிங்டாவோ கடற்கரைப் பகுதியில் இந்த விழா நடைபெறவுள்ளது .
இந்த விழாவில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் 23-ம் தேதி குவிங்டாவோ கடற்கரைக்கு வரவுள்ளார் .மேலும் இந்த விழாவின் ஒரு அங்கமாக அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும் இந்த அணிவகுப்பில் 60 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பங்கேற்கும் என்று சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஊ கியான் தெரிவித்துள்ளார் .
இந்த விழாவின் அணிவகுப்பில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சக்தி ஆகிய 2 கப்பல்கள் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .