Mnadu News

‘தளபதி 63’ படத்தில் நடிக்கும் கால்பந்தாட்ட வீராங்கனைகள் குறித்த தகவல்

இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தளபதி 63′ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட கால்பந்து மைதானம் அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் கால்பந்து அணிக்காக ஏரளமான நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்துஜா, ஆத்மிகா, மோனிகா, ரோபோ சங்கர் மகள், ’96’ படத்தில் விஜய் சேதுபதியின் மாணவி வர்ஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில், வரும் 29ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது.

Share this post with your friends