இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடித்துள்ள படம் ‘கே 13’. இந்த படம் வரும் மே 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தனது ஆரம்ப கால சினிமா குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், அவர் பேசியதாவது “அஜித்தின் கேரக்டர் பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டே அவர் மீது எனக்கு பெரிய மரியாதை வந்தது. அஜித் சாரை முதன்முறையாக எனது திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன்.
அவரது இல்லத்திற்குள் வரவேற்ற போதே ‘டிமாண்டி காலனி’ வெற்றிக்கு வாழ்த்துக்கள் அருள்நிதி என்று சொல்லி வரவேற்றார்”.
அந்த சந்திப்பிற்கு பிறகு அவர் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகாகமாகிவிட்டது .