Mnadu News

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த தகவல்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends