Mnadu News

‘தும்பா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

‘கனா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தர்ஷன் நடிக்கும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் “யு” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் மே 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த படத்திற்கு அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends