இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முதலாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கண்ணே கண்ணெ’ என்ற முதலாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.