Mnadu News

தடம் நாயகனின் அடுத்த படம் குறித்த தகவல்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘தடம்’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து இவர் ‘துருவங்கள் 16’ படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்னும் தலைப்பிடாத இந்த படத்தில் நாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘பொன்மணிக்கவேல்’ திரைப்படம் திரைக்கு வர தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends