இயக்குனர் புவன்நல்லான் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நடித்துள்ள படம் ‘ஜாம்பி’. இந்த படத்தில் நடிகை யாஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘ஜாம்பி’ படக்குழுவினர் படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படம் குறித்து இயக்குனர் புவன்நல்லான் கூறியிருப்பதாவது இந்த படத்தில் யோகிபாபுவின் தோழியாக யாஷிகா நடித்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் ஒரு த்ரில் சம்பவங்களை இந்த படத்தில் கூறுவதால், லவ், டூயட், ரொமான்ஸ் இதற்கெல்லாம் இந்த படத்தில் இடமில்லை. இந்த படத்தில் யோகிபாபு ஒரு நகைச்சுவை டான் ஆக நடித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.