மத்தியப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை தனது மூக்கால் அங்கிருந்தவர்களின் காலணிகளைத் துடைக்க சொல்லி வற்புறுத்தி சிலர் வீடியோ எடுத்தனர்.கடந்த ஞாயிறன்று மாண்ட்சரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்கள் சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு இளைஞனை சாலையோரம் அமரவைத்து, அங்கு வருபவர்களின் காலணியை எல்லாம் தனது மூக்கால் துடைக்கச் சொல்லி கொடுமைப் படுத்தினர். அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.இச்சம்பவத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட இளைஞனை ஒரு வாரமாகியும் காணாததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.