டெல்லியில் அமித்ஷா தலைமையில் உள்துறை உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது .அதில் இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே மத்திய குழு முதல்கட்ட ஆய்வு நடத்தும் என்று அறிவித்தது .
பேரிடர் நடைபெற்ற உடனேயே மத்திய அரசின் நிபுணர் குழு இனி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சேத விவரங்களை கணக்கிடும் என்றும் மாநில அரசு கோரிக்கை விடுத்த பிறகு மீண்டும் ஒருமுறை நிபுணர் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .