Mnadu News

ரஸ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா…

சர்வதேச பட்டாசு திருவிழாவில், இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நடத்திய ரஷ்யா முதல் இடத்தை பிடித்தது.ஆண்டுதோறும், சர்வதேச அளவில் பட்டாசு திருவிழா போட்டி ரஷ்யாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண உலக முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு மாஸ்கோவில் உள்ள ப்ரேடீவ்ஸ்கை பூங்காவில்(Brateevsky park ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் உலகளவில் 8 நாடுகள் பங்கேற்று, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இதேபோல் ரஷ்யாவும் தனது பங்குக்கு, ஓபரா, பாலெட், ஓபரெட்டா மற்றும் மியூசிக்கல் என்ற 4 கருப்பொருள்களின் அடிப்படையில் வானில் சுமார் 10 நிமிடம் வர்ணஜாலம் புரிந்தது.இதனை வியந்து பாராட்டிய சர்வதேச நடுவர்கள், ரஷ்யா வெற்றிபெற்றதாக அறிவித்தனர். போர்ச்சுகல் மற்றும் இத்தாலி முறையே 2 மற்றும் 3வது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இயற்கை சூழலை புரிந்துகொண்டு, அதற்கேற்ப இசைத்து வானில் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டதை கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More