Mnadu News

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்டில் பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்களை போட்டி நிர்வாகிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

பதக்கத்தின் ஒரு பக்கத்தில் வெற்றிக்கான கிரேக்க புராண பெண் கடவுளான நைக்கின் உருவமும், மற்றொரு பக்கத்தில் ஒலிம்பிக் வளையங்களும், டோக்கியோ ஒலிம்பிக்கின் சின்னமும் பதியப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜூனிச்சி கவனிஷி என்பவரின் வடிவமைப்பால் சில கோணங்களில் இந்த பதக்கங்கள் 3டி வடிவில் காட்சியளிக்கின்றன.

தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் முறையே 556 கிராம் மற்றும் 550 கிராம் எடையும், வெண்கல பதக்கம் 450 கிராம் எடையும் கொண்டுள்ளது. மொபைல் போன்கள் மற்றும் சிறிய மின்சாதன பொருட்களை மறுசுழற்சி செய்து அதில் இருந்து எடுக்கப்படும் உலோகங்களும் பதக்க தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends