அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், பெங்களுரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது- முதற்கட்டமாக பழைய மாடல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஐபோன் XR மற்றும் ஐபோன் XS செல்போன்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த போன்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் உள்ள கடைகளில் விற்பனையாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஐபோன்கள் விலை இந்தியாவில் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .