சென்னை முகப்பேர் நொளம்பூர் சாலையில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்க தலைவரும் ஐஜி மகேந்திரன் ஐபிஎஸ் அவர்களின் வீடு அமைந்துள்ளது. நேற்று இரவு இவரது வீட்டின் வளாகத்தில் உள்ள தென்னை மரம் காய்ந்த நிலையில் இருந்ததால் அந்த தென்னை மரத்தின் கீற்று அருகில் சென்ற மின்சார வயரில் உரசி தீ ஏற்ப்பட்டுள்ளது.
மரம் நன்றாக காய்ந்து இருந்ததால் மளமளவென மரம் தீ பற்றி எரிய இது பற்றி தீயணைப்பு துறைக்கும், நௌம்பூர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு ஜெஜெ நகரில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் சென்று தீயை அணைக்க முற்ப்பட்டனர்.
ஆனால் மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கமுடியவில்லை, பின்னர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது. இன்னும் வேகமாக தீ பரவியிருந்தால் மகேந்திரன் வீட்டினுள் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.