உலகமெங்கும் இருக்கும் ஹாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது மார்வல் தொடரில் நிறைவுப் படமாக தயாராகியிருக்கும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. இந்த படம் உலக அளவில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தில் வரும் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு விஜய் சேதுபதியின் குரல் இந்த கதாபத்திரத்திக்கு பொருந்தவில்லை என ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது . முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களுக்கு குரல் கொடுத்தவரையே மீண்டும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனே Jr ரசிகர்களிடம் நேரலையில் தோன்றி பேசினார் .ஆச்சிரியத்திலும் மகிழ்ச்சியிலும் திகைத்துப்போன ரசிகர்கள் ராபர்ட் டவுனே Jr பேசத்தொடங்கிய பின் கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர் .
ரசிகர்களின் இந்த அளவிலா அன்பிற்காக மார்வெல் நிறுவனம் ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.