ஷங்கர் – கமல் கூட்டணியில் 1996 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ படத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் ஷங்கர். கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க முன் வந்தது.
எப்போதுமே பட்ஜெட் கொடுக்காமல் படமெடுத்துப் பழகிய ஷங்கரிடம் லைகா நிறுவனம் பட்ஜெட் வழங்கியிருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் படத்தை கைமாற்றும் பேச்சு வார்த்தையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரிலையன்ஸின் பச்சை கொடிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.