மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர்ப்பதற்கான தகுதி தேர்வாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது .ஆனால் இந்த நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் வந்தன .இதனையடுத்து ,நீட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்றன.
இது குறித்து பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது ,நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார். எழும்பூரில், அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், சட்டப்பேரவையில் நீட் தேர்வை ஒரு விவாத பொருளாக்குவது தவறு என கருத்து கூறினார்.