ஈரோடு பாராளுமன்ற தொகுதி சேர்ந்த தாராபுரத்தில் அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை திருப்பூர் புறநகர் மாவட்டகழக செயலாளரான சட்டமன்றதுணை சபாநாயகர் மாண்புமிகு பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்..
உடன் கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன், ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், நகர செயலாளர் காமராஜ்,ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் அனைத்து கூட்டனி கட்சியின் முக்கிய பிரமுகர்கள், உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்கள்.
தாராபுரம் இஸ்லாமிய பெருமக்களை பற்றி நான் தவறாக பேசியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அது தவறான வதந்தி என்றும் நான் அந்த மக்களை நேசிக்க கூடியவன், சிறுபான்மை மக்களுக்காகவே இந்த அரசு செயலாற்றுவதாகவும் தாராபுரத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.