இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்து ஜாக்கி ஷெராப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது அட்லி துறுதுறுப்பான இயக்குனராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.
அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.