இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்கள் படக்குழுவினரிடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் திரைக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜெயம் ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.