பிரதீப் ரெங்கநாதன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்தனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்தில் சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, நிதின்சத்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.
இந்நிலையில், ‘ஜே,ஆர் 24’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்ட இந்த படத்திற்கு ‘கோமாளி’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.