ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் முதல்வராக பதவி ஏற்ற பின் அவர் போட்ட முதல் கையெழுத்து முதியோர் ஊக்கத்தொகையை உயர்த்துவது .இதனை பற்றி நேற்று பேசிய ஜெகன்மோகன் ரெட்டி இதற்கு முன் ஆட்சி செய்த சந்திராபாபு நாயுடு தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக முதியோர் பென்ஷன் தொகையை 2000 ஆக உயர்த்தினார்.
கடந்த 9 ஆண்டுகளில் எனது அரசியல் அனுபவத்தில் ஏழைகள் படும் கஷ்டத்தையும், நடுத்தர மக்களின் கஷ்டத்தையும் பார்த்து மிகவும் வருந்தினேன். தேர்தலின்போது பக்கம் பக்கமாக வாக்குறுதி அளிக்காமல் இரண்டே பக்கத்தில் 9 திட்டங்கள் அடங்கிய `நவரத்தினா’’ திட்டங்களை கொண்டு வந்தேன்.
நான் தேர்தலில் அளித்த வாக்குறுதியில் 5 ஆண்டுகளில் ₹3 ஆயிரம் ஆக பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தேன். அதன்படி தற்போது முதல்வராக பதவியேற்று முதல் கையெழுத்தாக பென்சன் தொகையை 2 ஆயிரத்தில் இருந்து 2,250 ஆக உயர்த்துகிறேன். மேலும் வரும் ஆண்டுகளில் அடுத்தடுத்து படிப்படியாக தொகையை உயர்த்தி காட்டுவேன் என்றும் கூறினார் .