சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதிபதிகள் சதாசிவம், ஷரத் அரவிந்த் பாப்டே, தஹிலரமானி ஆகியோருக்கு முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள் என பெருமிதம் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More