கல்வித்தத்ந்தை காமராசரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உலகக்கோப்பையில் இங்கிலாந்து தோற்று விடுவது போல் மாயை இருந்ததாகக் கூறினார். ஆனால் அந்த மாயையை உடைத்து இங்கிலாந்து வெற்றி பெற்று விட்டதாகக் கூறிய ஜெயக்குமார், இதேபோல் வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார் .